முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் இழக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவும், ரவி கருணாநாயக்கவை கட்சி பதவியிலிருந்து நீக்குமாறு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.