எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு போட்டியிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளிக்குமாறு தாம் சவால் விடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று - 22- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிணை முறிப்பத்திர ஆணைக்குழுவின் அறிக்கையில் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அப்படியான ஒருவரை கட்சியில் வைத்திருப்பதற்கு எதிராக பிரதமர் நாட்டு மக்களுக்கு முன்னுதாரணத்தை வழங்க வேண்டும்.
ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் பதவியை வகித்து வருகிறார். இதனால், கட்சியின் செயற்குழுவை கூட்டி அவரை கட்சியில் இருந்து நீக்க பிரதமர் தயாராக இருக்கின்றார?
தம்மை குறித்த இரகசியங்களை வெளியிட்டு விடுவார் என்ற அச்சத்தின் காரணமாக பிரதமர் , ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக செயற்பட மாட்டார். முழு நாடும் இது தொடர்பாக அவதானித்து வருகிறது எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.