சுதந்திர இலங்கையில் பிரித்தானியாவிடம் இருந்து இரவல் வாங்கிய ஜனநாயகத்தை முஸ்லிம்களும் ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாத ஒன்றுதான்.
ஜனநாயகம் எனும் கோட்பாட்டின் மூலமே ஒரு நாடு அதன் அனைத்து கட்டமைப்பினையும் ஒழுங்குபடுத்துகிறது. உள்ளூராட்சி சபை என்பதுதான் பகிர்ந்தளிக்கப்படும் அதிகாரத்தின் மக்களை அடையும் இறுதி வடிவம்.
முஸ்லிம்கள் தங்கள் கலாசார ஆன்மீக விவகாரங்கள் அனைத்தையும் பின்பற்றும்போது ஜனநாயகத்தின் வருகைக்குப்பின்னர் சில விட்டுக் கொடுப்புகளுடன் அரசாங்கங்களுடன் இசைந்து பயணிப்பது என்பது உஸ்மானிய சாம்ராஜ்யத்தை இழந்த புள்ளியிலேயே ஆரம்பமாகியது.
இலங்கையில் தேசியக்கட்சிகள் மாத்திரம் ஜனநாயக அரசியலில் இருந்தபோது அரசியல் தலைவர்கள் மக்களை நிர்வாகம் செய்த சமூகத் தொண்டர்களாகவே இருந்தார்கள்.
மாக்கான் மாக்கார் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றபோது மக்கள் அவரை ஒரு தேர்தல் வியாபாரியாகப் பார்க்கவில்லை. அவர் ஆன்மீகத்தை ஜனநாயகத்தாேடு பின்னி மக்களை திசை திருப்பவும் இல்லை.
ஆனால் இன்று தேர்தலுக்காக கிழக்கு மாகாணத்தை நோக்கி படை எடுக்கும் மொத்த வியாபாரிகள் கிழக்கின் முஸ்லிம் வாக்கு வங்கிகளை குறி
வைத்தே தங்கள் அரசியலை நகர்த்துகின்றார்கள். இவர்களும் முஸ்லிம்கள் என்ற வகையறாவில் அடங்குவதால் நாரே தக்பீர் கோஷம் முழங்க அல்லாஹ் ரஸூலின் நாமம் சொல்லியே மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறார்கள். பாமர வாக்களர்கள் அவர்களை நம்புகிறார்கள் அவர்களது பொய் வாக்குறுதிகளை வேதவாக்காக ஏற்று வாக்குகளையும் போட்டு
விடுகிறார்கள்.
அப்படி வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றுதான் சாய்ந்த மருதுக்கான தனியான நகர சபை. மரங் கொத்தி வாழை மரத்தில் மாட்டிய கதை. நாட்டின் பிரதமரை கொண்டுவந்து வழங்கிய வாக்குறுதி அது.
அந்த நாடகத்தின் கிளைமாக்ஸ்தான் சாய்ந்தமருது மக்களின் கட்டுக்கடங்காத விரக்கதியின் விளிம்பில் தோன்றிய பாேராட்டம். கட்சி அரசியலையும் ஜனநாயகத்தையும் கிழக்கில் மறு வாசிப்புச் செய்ய நிர்ப்பந்தித்த சாய்ந்தமருது முஸ்லிம்களின் சிந்தனை மாற்றம். கட்சித் தலைவர்கள் இதனை வெறும் எதிர்ப்பினை வெளிக்காட்டும் மக்கள் ஆர்ப்பாட்டமாகப் பார்க்கிறார்கள். ஆனால் விடயம் மிகவும் பாரதூரமானது.
சாய்ந்தமருது முஸ்லிம்கள், பள்ளிவாசல் நிர்வாகம், உலமாக்கள், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற முஸ்லிம் வாக்கு வங்கிகளை மையப்படுத்திய அரசியல் கட்சிகள், வக்பு சபை, உள்ளூராட்சி அதிகாரங்களுக்கான கபினட் அந்தஸ்துடைய முஸ்லிம் அமைச்சர், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தேர்தல் ஆணையாளர் என பல தரப்பினர் தொடர்புபட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசியப்பிரச்சினையாக இன்று இது மாறி இருக்கின்றது.
எல்லாவற்றுக்கும் மேலாக தங்களது சபையை வெல்வதற்கான சுயேட்சை குழுவினை சாய்ந்தமருது மக்களும் பள்ளிவாசல் சமூகமும் களத்தில் இறக்கியது முஸ்லிம் கட்சிகளை நடுக்கத்திற்கு உள்ளாக்கியது.
ஈற்றிலே மு.கா. தரப்பு பள்ளிவாசலை சட்டப்பிரச்சினைக்குள் சிக்க வைக்கும் வியூகத்தை வகுத்து முஸ்லிம்களின் பள்ளிவாசல்களின் அரசியல் வகிபாகத்தை கேள்விக்குட்படுத்தியது.
எப்பாடுபட்டேனும் தேர்தலில் சாதிக்க முனையும் வெட்கம் கெட்ட அரசியலை ஜனநாயகம் என்று அழைத்தால் முஸ்லிம்களும் பள்ளிவாசல்களும் அதனை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாதுதான்.
மேலும் சாய்ந்தமருது மக்களின் இப் பாேராட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியலாே டு பின்னி இன்னும் மு.கா தரப்பு அதனை திசை திருப்பியது. அதனை தெளி வுபடுத்துமாறு சம்மந்தப்பட்ட திணை க்களத்திடம் முறையிட்டு பள்ளிவாசல் நிர்வாகத்தின்மீது விசாரணை நடத்துமாறு மு.கா கோரியிருந்தால் அது முஸ்லிம்களின் அணுகுமுறை.
மாறாக அதனை முற்றிலும் அரசியலாக்கி தேர்தல் ஆணை யாளர்வரை கொண்டு சென்று அந்நியர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை கற்றுக் கொடுத்துள்ளமை ஒரு வரலாற்றுத் துராேகமேயன்றி வேறில்லை. பொது பலசேன பாேன்ற இனவாதிகளின் வாய்களுக்கு இவர்கள் பாகு போட்ட அவலை அள்ளி வழங்கி உள்ளார்கள்.
இதில் கிழக்கின் மு.கா தரப்பிலுள்ள ஆளுமைகளை கட்சி எந்தளவு கலந்தாலாேசித்தது என்றும் இதுவரை விளங்கவில்லை.
"தொடரும்"