எனக்கு வாக்களித்த எல்லா ஊர்களுக்கும் எனது சேவைகள் சென்று கொண்டிருக்கின்றன. எந்த வித ஊர் பாகுபாடுகளுமின்றிக் கோடிக் கணக்கான பணத்தை மக்களுக்காகச் செலவு செய்து வருகிறேன். அண்மையில் அட்டாளைச்சேனைப் பாடசாலைகளுக்குக் கோடிக் கணக்கான பணத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன்.
எதிர்வரும் காலங்களில் பாலமுனை தொடக்கம் அட்டாளைச்சேனை வரையான கடற்கரை வீதியை ரூ.40 மில்லியன் செலவில் செய்வதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம். அதே போன்று நிந்தவூர் செங்கப்படை, கயற்றயடி விவசாயிகளுக்கான வீதியை ரூ.60 மில்லியன் செலவில் செய்யவுள்ளோம்.
இவ்வாறு எமது மக்களுக்கு நாம் சேவை செய்து கொண்டிருக்கும் போது..நேற்று அமைச்சர் றிசாட் வந்து..அந்த கலாச்சார மண்டபம் முடிந்து விட்டதா? இல்லையென்றால் நான் பணந் தருகிறேன் என்று கூறுகிறார். என்று ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தேசிய பிரதி அமைப்பாளரும், சுகாதார பிரதியமைச்சருமான எம்.சி.பைசால் காசீம் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச சபையில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீ.ல.மு.கா கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று அரசடித்தோட்டம் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதியமைச்சர் பைசால் காசீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் பளீல் பீ.ஏ, வேட்பாளர்களான சட்டத்தரணி.ஏ.எல்.றியாஸ் ஆதம், ஏ.மஃறூப் மௌலவி, எஸ்.எம்.ஐ.எஸ்.ஸறபுல்லாஹ் மௌலானா, ஏ.அலிக்கான், தேசியப்பட்டியல் உறுப்பினர்களான ஏ.எல்.நஜிமுத்தீன் ஆசிரியர், எம்.ஐ.ஆதம் அலி உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.