Top News

இது ஒரு குற்றச் செயலாகும்: நாமல் ராஜபக்ஸ



இந்தோனேசியா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசியை இந்த அரசாங்கம் வீணடித்ததைப் போன்று, தற்போது பாகிஸ்தான் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரத்தையும் வீணடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் நாமல் இதை பதிவிட்டுள்ளார்.

“இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னர் இந்தோனேசியாவினால் 5000கிலோ மெட்ரிக் டொன் அரிசி இலங்கைக்கு வழங்கப்பட்டது.

எங்கள் அரசாங்கம் தரகு பெற்றுக் கொள்வதற்காக அதனை வேண்டும் என்றே வீணடிப்பதுடன், விலங்கு உணவாக வழங்குகின்றது. அதே நிலைமை தான் தற்போது பாகிஸ்தானில் இருந்து கிடைத்த 10000கிலோ மெட்ரிக் டொன் உரத்திற்கு ஏற்படவுள்ளது.

தற்போது துறைமுகக் கிடங்கில் அது வீணடிக்கப்பட்டு வருகின்றது. இது ஒரு குற்றச் செயலாகும்” என நாமல் பதிவிட்டுள்ளார்.நாட்டில் நிலவும் உரப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக பாகிஸ்தானிடம் இருந்து உரத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

இதையடுத்து பாகிஸ்தானிலிருந்து 10000 மெட்ரிக் டொன் உரம் கடந்த 3ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/RajapaksaNamal/status/950590487345299456/photo/1?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.tamilwin.com%2Fpolitics%2F01%2F170499
Previous Post Next Post