மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் மேடைகளில் விமர்ஷனம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் அமைச்சர் ரவி கருணாநயக்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்த போது வாக்களிப்பில் கலந்துகொள்ளாது, சபையிலிருந்து வெளியியே சென்று ரவி கருணாநாயக்கவிடம், தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் உங்களுக்கு எதிராக வாக்களிக்க வில்லை என்று கூறிவிட்டு வாழ்த்தும் தெரிவித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தான் இதனை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் ஜனாதிபதி நேற்று (22) கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மத்திய வங்கி நிதி மோசடியுடன் தொடர்புபடும் சகலருக்கும் எதிராக தண்டனை வழங்குவதற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருமாறு பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் ஜனாதிபதி மேலும் கேட்டுக் கொண்டார்.