Top News

அமெரிக்காவின் எந்த சமாதான திட்டங்களையும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை



அமெரிக்காவிற்கான தமது தூதுவரை மீள அழைப்பதாக பாலஸ்தீன் அறிவித்துள்ளது. ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது.

இதற்கு பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த நகர்வை அடுத்து, அமெரிக்காவின் எந்த சமாதான திட்டங்களையும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று பாலஸ்தீன் அறிவித்துள்ளது.

பாலஸ்தீன் ஜனாதிபதி மஹ்முட் அபாஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இந்த அறிவிப்பை அடுத்து காசா பள்ளத்தாக்கில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக ஏற்பட்ட மோதல்களில் 13 பாலஸ்தீனியவர்கள் வரையில் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அமெரிக்காவின் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post