Top News

இஸ்லாதிற்கு எதிராக இந்தியாவும் இஸ்ரேலும் இணைவு: பாகிஸ்தான் மந்திரி ஆவேசம்

ஆறுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், இஸ்லாம் மதத்துக்கு எதிராக இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை  மந்திரி காஜா முஹம்மத் ஆசிப் குற்றச்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் நாட்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ‘ஜம்மு-காஷ்மீர் பகுதியை இந்தியா ஆக்கிரமித்து வைத்துள்ளதைப்போல் பாலஸ்தீனம் நாட்டுக்கு சொந்தமான பெரும்பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. ஆனால், இஸ்ரேலை ஒரு நாடாக பாகிஸ்தான் ஏற்றுகொண்டதில்லை’ என்று குறிப்பிட்டார்.

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் நமது நாட்டு வீரம்மிக்க படைகள் ஆவேசமாக செயல்பட்டு பல தியாகங்களை புரிந்துள்ளன. இதில் பல வெற்றிகளையும் நாம் பெற்றுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். #tamilnews
Previous Post Next Post