இலங்கையில் புழக்கத்திலுள்ள நாணயங்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. நடப்பாண்டில் சில்லறை நாணயங்களில் பல மாற்றங்களை செய்யத் திட்டமிட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சில்லறை நாணயங்களுக்காக உலோகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தயாரிப்பு செலவினை குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சில்லறை நாணயங்களின் தேவை அதிகரித்துள்ளமையினால், அதன் தயாரிப்பினை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.