எம் நுஸ்ஸாக்
அண்மையில் வெளியான க.பொ.த.உயர்தரப் பெறுபேறுகளின்படி மாவனல்ல சாகிறா (தே.பா) யில் இருந்து இம்முறை 94 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
#English,Tamil medium ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்து பல்கலைக்கழக ம் செல்வது ஒரு சிறப்பம்சமாகும்.
#கலைப்பிரிவு:31 பேர்,
#வர்த்கப் பிரிவு:16 பேர்,
#உயிரியல் விஞ்ஞானம்: 28 பேர்,
#பௌதீகவியல்:19 பேர்.
மொத்தமாக 94 மாணவர்கள் பல்கலைக்கழக ம் செல்லவுள்ளனர்.
மருத்துவ பீடத்திற்கு 05 மாணவர்களும்,பொறியியல் பீடத்திற்கு 06 மாணவர்களும் செல்லவுள்ளனர்.
#2020 ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவிருக்கும் இக் கல்லூரியின் வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் பல்கலைக்கழக ம் செல்வது இதுவே முதல் தடவையாகும்.
இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்துவரும் மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட அதிபர் எம்.எம்.ஜவாத்(நளீமி)( SLEAS) மற்றும் ஆசிரிய சமூகத்தினருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.