வடகிழக்கை இணைக்க விரும்பிய ஹசனலி காக்கா இன்று அதை துாக்கிப்பிடித்து பிரச்சாரம் செய்வதை காண்கையில் மிகவும் சிரிப்பாக இருப்பதாக அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நிந்தவூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஹக்கீம் வடகிழக்கு குறித்து உரையாற்றிய போது இதனை குறிப்பிட்டார்,
கட்சியுடன் இருக்கும் போது ஹசனலி அவர்கள் தமிழ் மக்களுக்கு இணைத்துக் கொடுக்க வேண்டும் என்பார், இன்று அதனை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறார் இவரின் உண்மை முகம் என்ன? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நான் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக குறிப்பிடுகின்றனர், அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன். இந்த விடயங்களை சிங்கள அமைச்சர்கள் பேசினால் பரவாயில்லை காக்கா பேசும் போதுதான் கவலையாக இருக்கிறது.
இது நடைபெறும் காரியம் என்றாலும் பரவாயி்ல்லை, அதற்காக நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக குரல் எழுப்ப தேவையில்லை, நாங்களும் சிறுபான்மை கட்சிகள் நிதானமாக வார்த்தைகளை விட வேண்டும்.
எங்களுக்கான தனி மாகாணம் அமையவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம், இவை எங்கள் தலைமுறையில் இடம்பெறுமா என்பதில்சந்தேகம் உள்ளது . இவைகள் ஒன்றுமே நடக்காது. என்றார்