Top News

ஆவேசமாக பேசிய மரிக்கார்!



முஸ்லீம் காங்கிரஸ், ரவுப் ஹக்கீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், றிசாத், மனோ கனேசன், சம்பிக்க ரணவக்க ஆகிய சிறு கட்சிகள் ஜ.தே.கட்சிக்குள் சங்கமித்து "சைலொக்கின்கதை போன்று ”  ஒரு இறாத்தல் இறைச்சியை கேட்பது போன்ற கதையாகிவிட்டது. .  - என கொழும்பு மாவட்ட  பா.உ எஸ்.எம். மரிக்காா் கொழும்பில் ஜ. தே.கட்சி வேட்பாளா் ரோசியை ஆதரித்து  உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அவா் தெரிவித்தாா்

அவா் அங்கு உரையாற்றுகையில் -

கொலநாவை நகர  சபைக்காக உள்ள 15 நகர சபை உறுப்பினர்களில் வேட்பாளா் பட்டியலில்  முஸ்லீம் காங்கிரஸ் 3 ஆசனமும் அ.இ.ம. காங்கிரஸ் 3 ஆசனமும் மனோ கனேசன் 3 ஆசனமும் சிகல உருமைய 1 ஆசனமும் தேர்தலில் போட்டியிட்ட கேட்டதால்  நான் இங்கு கொலநாவையில் தேங்காய் துருவ வா இருக்கன்.? மழை வெயில். வெள்ளம் என்று பாராது 24 மணித்தியாலயங்கள் இந்தப் பிரதசத்தில் ஜ.தே. அமைப்பாளராக இருந்து கொண்டு சகல சமுகங்களையும் ஒன்றிணைந்து  சேவைசெய்யும்போது எவ்வித சேவையும் செய்யாது ஆகக் குறைந்தது ஒரு தண்னீா் போத்தலையாவது இந்தப் பிரதேச மக்களுக்கு கொடுக்காத இந்த கட்சித் தலைமைகள்   தோ்தல் வந்தால் மட்டும் ஜ.தே.கட்சிக்குள் சங்கமித்து இன ரீதியாக ஆசனப் பங்கீடு  கேட்டு களத்தில் இறங்கிவிடுவாா்கள். 

இதனால் ஜ.தே.கட்சிக்காக பாடுபட்டு சேவை செய்தவா்கள் வேட்பாளா் கிடைக்காமல் அதிருப்தி அடைகின்றனா். . இத் தலைவா்கள் காலத்துக்கு காலம் தோ்தல் மட்டும் வந்தால் ஜ.தே.கட்சியிடம்  அவா்களுக்கு ஆசனம் பங்கீடு கேட்பது .  நியாயமா ? வட கிழக்கு வெளியே 7 தசாப்தங்களாக சிறுபாண்மை மக்களின் தலைவா்கள்   ஜதே.கட்சியில் தலைவா்களாக இருந்து சேவைசெய்துள்ளனா். சிறுபாண்மை மக்களும் கலாண்டு காலமாக ஜ.தே.கட்சியை ஆதரித்தும் வருகின்றனா்  . சிறிய கட்சிகள் இங்கு ஆசனப் பங்கீடு கேட்பது ”ஒரு இறாத்தல் இறைச்சியை ஒரு துளி இறத்தம் சிந்தாது கேட்பது போன்ற கதையாகி விட்டது. எமது. ஜ.தே.கட்சிக்குள்  என பா. உறுப்பிணா்  எஸ்  எம் மரிக்காா்  உரையாற்றினாா்.

(அஷ்ரப் ஏ சமத்)
Previous Post Next Post