Top News

சாய்ந்தமருது மக்களைப்போல் நன்றி கெட்டவர்கள் யாரும் இல்லை!


 சாய்ந்தமருதுக்காக மு.காங்கிரஸ் எவ்வளவோ சேவைகளைச் செய்துள்ளது. கடந்த 17வருடங்களுக்குள் பல கோடிகளை அங்கே கொட்டியிருக்கின்றார்கள்.

தோணாவை பலகோடி செலவு செய்து செப்பணிட்டுத்தந்தது யார்?

மீனவர்களின் வசதிக்காக பலகோடி செலவு செய்து வோர்ட்யாட் கட்டித்தந்தது யார்?

சுனாமியால் பாதிக்கப்பட்ட உங்களின் ஆதார வைத்தியசாலையை பல கோடி செலவு செய்து கட்டித்தந்தது யார்?

சாய்ந்தமருது ஆஸ்பத்திரிக்கு ஒப்பரேன் தியேட்டர் தொடக்கம் பல ஆய்வு கூடங்களை அமைத்து தந்ததும் அல்லாமல் 20பேர்க்கு மேற்பட்ட வைத்தியர்களை நியமித்து தந்தது யார்?

சாய்ந்தமருதுக்கு அத்தனை வீதிகளையும் போட்டுத்தந்தது யார்?

சாய்ந்தமருதிலே தலைநிமிர்ந்து நிற்கும் டி.எஸ் ஒப்பீசை கட்டித்தந்தது யார்?

சாய்ந்தமருதுக்கு என்று பல குப்பை மிசின்களை பயனுக்கு விட்டது யார்?

சாய்ந்தமருது மக்களுக்கென்று ஜனாசா ஏற்றும் வாகனம் வாங்கித்தந்தது யார்?

ஸாகிறா கல்லூரி சாய்ந்தமருதின் சொத்து என்றதனால் அதற்காக பல கோடிகளை செலவு செய்து அந்த பாடசாலை இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கு உதவி செய்தது யார் ?

இதைப்போன்று வீதிக்கு வீதி மின்னொளிகலால் அந்த ஊரை அலங்கரித்துத் தந்தது யார்?

சாய்ந்த மருது மக்களுக்காக பிரமாண்டமான முறையில் செலவு செய்து சிறுவர் பூங்கா அமைத்து தந்தது யார்?

சாய்ந்தமருதுக்கான உப வார்ட்டர் சப்லே ஒப்பீசை அழகான முறையில் அமைத்து தந்தது யார்?

சாய்ந்தமருது மக்களுக்காக மாகாணசபை முதலமைச்சரை தரமுற்பட்டபோது இல்லை இல்லை எனக்கு எம்பி பதவிதான் வேண்டும் என்று அடம்பிடித்து எங்கள் கட்சியை விட்டு வெளியேறிச் சென்ற ஊர்த் துரோகி யார்?

மு.காங். தலைவர் கனவிலும் நினைவிலும் சாய்ந்தமருது மக்கள் பற்றியே சிந்தித்து தோய்ந்து போவதைக்கூட நன்றியோடு பார்க்காத மக்கள் யார்?

சாய்ந்தமருதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனிவீடு கட்டி றோடுபோட்டு அந்த மக்களின் கவலையை போக்கி வைத்தது யார்?

சாய்ந்தமருது இளைஞர்களுக்கு வெட்டும் வோலும் கொடுத்து விளையாட மைதானமும் அமைத்துக் கொடுத்தது யார்?

சாய்ந்தமருது மக்களுக்காக அழகான வாசிகசாலை அமைத்து கொடுத்தது யார்?

கடல் கரைவீதி, ஸாஹிரா கல்லூரி போன்ற வீதிகளை தரமான காபர்ட் வீதியாக போட்டுத்தந்தது யார்?

மு.காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவராக முழக்கம் மஜீதை நியமித்து அழகு பார்த்தது யார்?

அந்த பதவியை வைத்துக்கொண்டு சாய்ந்தமருது மக்களுக்கு அவர் செய்த சேவைகளை நினைவு கூறாமல் நன்றி மறந்தது யார்?

கல்முனை மாநகரசபைக்கு கடந்தகாலங்களில் சாய்ந்தமருது சார்பாக அந்த ஊரின் மிகமுக்கிய புள்ளிகளை சபைக்கு அனுப்பிவைத்தது யார்?

அவர்கள் அங்கே சென்று சண்டை பிடித்தது மட்டுமல்ல தலையிலும் அடிவாங்கி ரத்தம் சொட்ட சொட்ட சாய்ந்தமருது மக்களுக்காக போராடுபவர்களை தெரிவு செய்து அனுப்பியது யார்?

அப்படியான தியாகிகளை இன்று தாக்கமுற்படும் துரோகிகள் யார்?

உங்களுக்காக மேயர் பதவி தந்து அழகு பார்த்தது யார்?

அந்த மேயர் சாயந்தமருது மக்களுக்கு சேவை செய்வது காணாது என்று உடனே நிசாம் காரியப்பரை நியமித்து அவர் மூலமாக பலகோடி அபிவிருத்திகளை செய்து தந்தது யார்?

அது மட்டுமா இவ்வளவு சேவைகளையும் பெற்றுக்கொண்டு நன்றிகெட்ட தனமாக எங்களுக்கு தனியாக பிரதேசசபை தாருங்கள் என்று கேட்கின்றார்கள். அதற்கு மு.காங்கிரஸ் பிரதேசசபை அல்ல மாநகர சபையே தருகின்றோம் என்று பலமுறை கூறியபோதும் இல்லை இல்லை பிரதேசசபைதான் வேண்டும் என்று அடம்பிடிக்கின்றார்களே ஏன்?

இப்படி எவ்வளவோ சேவைகளை அள்ளிக் கொட்டிய மு.காங்கிரசை எதிர்த்து போர்க்கொடி தூக்கும் இவர்களை யாரும் மன்னிக்கக்கூடாது.

ஆகவே எதிர்வரும் தேர்தலில் எங்கள் போராளிகள் அறிவில்லாத சாய்ந்தமருது மக்களுக்கு தகுந்த பாடத்தை நிச்சயமாக கற்பிப்பார்கள். அதற்காகத்தான் பிர்தௌஸ் போன்ற தன்மானச் சிங்கம் தலைமையில் நாங்கள் களம்காண வந்துள்ளோம்.

ஆகவே ரோசம் உள்ளவர்கள் அனைவரும் சுயேற்சைக்கு வாக்களித்தாலும்,....ரோசம் அற்ற ஏராளமானமான மக்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள் என்பதை நாங்கள் இத்தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம்.

வாழ்க மு.காங்கிரஸ்் வாழ்க போராளிகள்...என்று கூறி என் உரையை முடிக்கின்றேன்.

முனைமருதவன்

எம்.எச்.எம்.இப்றாஹிம்.
கல்முனை
Previous Post Next Post