மகிந்த தனது ஆட்சிக்காலத்தில் வடக்கில் எந்தவொரு காணிகளையும் சுவீகரிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மகிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே வடக்கில் உள்ள அதிகளவிலான காணிகள் விடுவிக்கப்பட்டன. காணிகளை மகிந்த ராஜபக்ச விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். நாங்கள் காணிகளை விடுவித்து விட்டு கண்ணிவெடிகளை படிப்படியாக அகற்றினோம்.
ஆனால் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று வருட காலத்தில் அனைத்துக் காணிகளையும் விடுவித்திருக்க முடியும். பொது மக்களின் காணிகள் மீள வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். அதனையே நாங்கள் வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.