சூழ்நிலை மோசமானால் நாங்கள் வன்முறைகளில் இறங்கவும் தயார்.

NEWS



மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தை வைத்துக் கொண்டு தன் மீதும் ஐக்கிய தேசியக் கட்சி மீதும் சேறுபூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என, அக்கட்சியைச் சேர்ந்தவரும் இராஜாங்க அமைச்சருமான சுஜீவ சேனசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமது கட்சி, வன்முறைகளில் இன்னமும் இறங்கவில்லை எனத் தெரிவித்த அவர், சூழ்நிலைக்குத் தேவைப்படுமாயின், அதையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

களனியில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதைத் தெரிவித்தார். தன்னுடையதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் நற்பெயரைக் கெடுப்பதற்காக, சிலர் முயற்சி செய்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பிணைமுறி விவகாரம் தொடர்பாகக் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாக, ஆரம்பத்திலேயே எச்சரிக்கையை எழுப்பியதாகவும், அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக, கோப் குழுவுக்கு அறிவித்ததும் தானே என்றும் அவர் குறிப்பிட்டார்.
6/grid1/Political
To Top