முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
2001 -2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரவி கருணாநாயக்க வர்த்தகத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, சதொச நிறுவனத்திற்கான அரிசி கொள்வனவில் 4 மில்லியன் ரூபா நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சதொச நிறுவனத்தில் முன்னாள் தலைவரான விமல் பேரராவுக்கு எதிராக, லஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ரவி கருணாநாயக்கவின் பெயரும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, ரவி கருணாநாயக்கவுக்கு நீதிமன்றில் முன்னிலையாக அறிவித்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.