ஏமனில் அரசுப்படைகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஹவுதி குழுவினர் வீசிய ஏவுகணையை இடைமறித்து அழித்து விட்டதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
ஏமனில் அரசுப்படைகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஹவுதி குழுவினர் வீசிய ஏவுகணையை இடைமறித்து அழித்து விட்டதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரில், அரசுப்படைகளுக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர் குழுவுக்கு ஆதரவாக ஈரானும் செயல்பட்டு வருகின்றன. சவூதியை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல முறை ஏவுகணைகளை ஏவியுள்ளனர். ஆனால், அதனை சவூதி இடைமறித்து அழித்துள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் தெற்கு ஜிசான் பிராந்தியத்தை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுவினரால் ஏவப்பட்ட ஏவுகணை சவுதி படைகளால் சுட்டு வீழ்த்தபட்டது. இதனை சவுதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஏவுகணைகள் மற்றும் நிபுணத்துவங்களை ஹவுதி குழுவினருக்கு ஈரான் வழங்குவதாக சவுதி அரேபியா குற்றம் சாட்டுகிறது. ஆனால், ஈரான் இதனை மறுத்துள்ளது.