(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா மற்றும் பாடசாலைக்கு கணனி தொகுதிகளை கையளிக்கும் நிகழ்வு என்பன (15) திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் எம். ஐ. எம். இல்யாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக சிம் கெம்பஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அன்வர் ஏ முஸ்தபா கலந்து கொண்டதோடு, சாய்ந்தமருது 15-17 பிரிவின் கிராம சேவை நிலதாரி எல். நஸார் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டார்.
இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரின் மூலமாக 5 கணனிகளை பாடசாலைக்கு பெற்றுக் கொடுத்தமைக்காக சிம் கெம்பஸ் பணிப்பாளர் அன்வர் ஏ. முஸ்தபாவைப் பாராட்டி ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் சார்பாக பாடசாலையின் அதிபரினால் நினைவுச் சின்னமும் நிகழ்வின் போது வழங்கப்பட்டது.