பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானை அமெரிக்கா குற்றம் சாட்டுவதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது என்றும், நிதி உதவி பெறுவதற்காக அமெரிக்காவை ஏமாற்றிவிட்டது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கான நிதி உதவி மற்றும் ராணுவ உதவி ரத்து செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக பயங்கரவாத இயக்கங்கள் நிதி உதவி பெறுவதற்கு பாகிஸ்தான் தடை விதித்து உள்ளது. இருப்பினும் பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது.
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க சீனா கரம் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா கூறிவரும் நிலையில், சீனா எதிர்ப்பை பதிவு செய்து உள்ளது.பாகிஸ்தானை அனைத்து நிலைகளிலும் தன்னுடைய நட்பு நாடாக பார்த்துவரும் சீனா, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கையும் உலக அரங்கில் முடக்கி வருகிறது.
இப்போது அமெரிக்காவின் நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து உள்ள சீனா,
பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானை நோக்கி அமெரிக்கா விரல்
உயர்த்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டு உள்ளது. பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கையை ஒரு நாட்டின்
பொறுப்பாக திணிக்க முடியாது என சீன அரசு நிர்வாக அதிகாரி கூறி
உள்ளார்.
பயங்கரவாதம் பாகிஸ்தான் மண்ணில் பாதுகாப்பாக செயல்படுவதற்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையில் இறங்கி உள்ளநிலையில் பாகிஸ்தானை காப்பாற்றும் முயற்சியாக சீனா களமிறங்கி உள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தினால் பெரும் இழப்பை சந்தித்து உள்ளது என கூறிஉள்ள சீன வெளியுறவுத்துறை, பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்பாட்டில் பாகிஸ்தானின் செயல்பாடும் உள்ளது என கூறி
உள்ளது. பயங்கரவாத விவகாரத்தில் ஒருவரை நோக்கி ஒருவர் விரலை உயர்த்துவதை தவிர்த்து அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு
எதிரான நடவடிக்கையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என சீனா கூறி உள்ளது.