Top News

மனம் திறக்கிறார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்.



ஓட்டமவடி அஹமட் இர்ஷாட் 

(வீடியோ).,நான் எதற்காக காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்.
வீடியோ எதற்காக நான் களமிறங்கியுள்ளேன்.? -

www.youtube.com/watch?v=1O7lnfXI81g&feature=youtu.be

அரசியல் அதிகாரம் என்பது பாராளுமன்றமாக இருக்கலாம் அல்லது நகர சபை, மாகாண சபையாக இருக்க வேண்டும் என்பதற்கு அப்பால் மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்பதற்கான அதிகாரம் என்பதை தவிர நான் வேறு எதனையும் சிந்திப்பது கிடையாது. இத்தேர்தல் அடிமட்ட அல்லது குறைந்த பட்ச தேர்தலால இருந்தாலும் அதனை பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்வதோடு எனது மக்களுக்கான குரலாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடுகின்றேன் என தெரிவிக்கின்றார் முன்னாள் மகாண சபை உறுப்பினரும் பொறியியலளருமான ஷிப்லி பாரூக்.

மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த ஷிப்லி பாரூக்… நான் மாகாண சபையில் உறுப்பினராக இருந்து விட்டு குறைந்தபட்ச அதிகாரத்தினுடைய தேர்தலில் களமிறங்குவது சம்பந்தமான விடயங்களுக்கு அப்பால் குறைந்தபட்ச அதிகாரத்தினை கொண்டாவது என்னை முழுமையாக அர்ப்பணித்து சமூகத்திற்கு சேவை செய்வதே எனது குறிக்கோளாக இருக்கின்றது. அந்த வகையில் காத்தான்குடி நகர சபையினை வைத்து பலரும் கூறுகின்ற குற்றச்சாட்டு ஊழல் நிறைந்த சபையாக காணப்படுகின்றது என்பதாகும்.

ஆகவே ஊழல்வாதிகளின் கையில் ஏன் மீண்டும் காத்தான்குடி நகர சபையினை கையளிக்க வேண்டும்.? அல்லது அதற்கு எதிரான ஒரு முன்னெடுப்பினை எடுக்க கூடாது என்ற வகையிலேதான் நான் இது ஒரு சிறிய தேர்தலாக இருந்தாலும் சமூகம் எதிர்பாத்து நிற்கின்ற விடயங்களை கருத்தில் கொண்டு தேர்தலில் குதித்துள்ளேன். இருந்தாலும் எதிர் அணியில் போட்டியிடுகின்றவர்களை பார்க்கின்ற பொழுது குறிப்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புது முகங்களை அறிமுகம் செய்திருந்தாலும் ஏற்கனவே குறித்த விடயங்களை நேர்த்தியாக முன்கொண்டு சென்ற தகுதியானவர்கள் ஒரு வட்டாரத்தில் கூட போட்டியிடாமல் பின்வாங்கி தங்களை தாங்கள் பாதுகாத்துக்கொண்டு மக்கள் சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமையானது கவலையான விடயமாக இருக்கின்றது.

மக்களை பற்றி பேசுகின்ற, மக்களுடைய பிரதி நிதிகள் என்று கூறுகின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னாணியானது தேர்தலில் கூட மக்களுடைய ஆணையை பெறுவதில் தயக்கம் காட்டுகின்றமையினை பார்க்கின்ற பொழுது எவ்வாறு இவர்கள் சமூகத்திற்கு சேவை செய்ய போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. அதே போன்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் பக்கதிலிருந்து களமிறக்கப்பட்டவர்களை பார்க்கின்ற பொழுது ஏற்கனவே நகர சபையில் இருந்தவர்களைதான் களமிறக்கியுள்ளார்.

ஏற்கனவே நகர சபையில் இருந்தவர்களை பற்றி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஊழல் நிறைந்த இடமாக குறித்த நகர சபை காணப்பட்டது என்ற பலத்த குற்றச்சாட்டினை சுமர்த்தியிருந்தது. அந்த வகையில் பார்கின்ற பொழுது எங்கள் மூலமாக களமிறக்கப்பட்டுள்ள அனைவரும் சமுக சிந்தனையாளர்களாக இருக்கின்ர அதே நேரத்தில் குறைந்த அதிகாரத்தினை வைத்து இறைவனுக்கு பயந்தவர்களாக சமூகத்திற்கு சரியான முறையில் சேர வேண்டிய அபிவிருந்திகளையும், ஏனைய விடயங்களையும் சரி வர செய்து முடிப்பாளர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும், பிரதி நிதிகளுக்கும் முன்னுதாரணமாக பல விடயங்களை எங்களுடைய காலத்திற்குள் செய்து காட்டியிருக்கின்றோம். அவ்வாறான முன்னுதாரணமான சபையாக காத்தான்குடி நகர சபையினை இஸ்லாமிய சட்டதிட்ட விழுமியங்கள், ஒழுக்க விழுமியங்கள் , ஊழல் அற்ற நிருவாகத்தினை கொண்டு செயற்படுகின்ற சபையாக எங்களிடம் அதிகாரம் வழங்கப்படுகின்ற பொழுது நடாத்தி காட்டுவோம் என தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அந்தவகையிலே யார் எதை செய்தார்கள்.? எவ்வாறு கடந்த நகர சபை காலங்களில் நடந்து கொண்டார்கள்.? எவ்வாறான ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது தொடுக்கப்பட்டது.? இதுவரை அவர்களால் அதற்கான விடையினைம்கொடுக்க முடியாதுள்ளது என்பது சம்பந்தமான எல்லா விடயங்களையும் மக்கள் நன்கறிந்தவர்களாக இருக்கின்றார்கள்.

அதுபோலவே கிழுறியா வட்டாரத்தில் போட்டிடுக்கின்ற முன்னாள் நகர சபையின் தவிசாளருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை நல்லட்சிக்கான தேசிய முன்னணி முன்வைத்துள்ளது. ஆகவே முடியுமாக இருந்தால் நகர சபையில் இருந்தவர்கள எந்த ஒரு ரூபாயினையும் ஊழல் செய்ய வில்லை, கொமிசன் எடுக்கவில்லை, களவெடுக்க வில்லை என அழிவு சத்தியம் பன்ன முடியுமாக இருந்தால்.? இன்ஸா அல்லாஹ் நாங்கள் அவர்களுடைய விடயங்களை பரிசீலிப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

அதன் அடிப்படையில் வெற்றி தோல்வி என்பது இறைவனின் கையில் இருக்கின்றது. அந்த வெற்றியினை அடைந்து கொள்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். ஏற்கனவே மக்களுக்கு நேர்மையான அரசியலினை எவ்வாறு செய்துவது.? மார்க்கத்துடனான அரசியலினை எவ்வாறு நடமுறைப்படுத்துவது என்பதனை நாங்கள் செய்து காட்டியிருக்கின்றோம். இவைகளை மக்கள் அங்கீகரிக்கின்ற பொழுது நிச்சயமாக இறைவன் இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றியை தருவான் என்பதில் எங்களிடம் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

நேர்மையாக இருக்க வேண்டும், ஊழல் அற்றதாக இருக்க வேண்டும், எவ்விதமான மோசடியும் அற்ற அரசியலாக இருக்க வேண்டும், என்பது எல்லோரும் பேசுகின்ற விடயமாகவும் விரும்புகின்ற விடயமாகவும் இருகின்றது. அதற்கு நாங்கள் செயல்வடிவம் கொடுத்து செய்து காட்டியிருக்கின்றோம். மிக நேர்மையாக மக்களுக்கு எந்த வகையிலும் அநியாயம் செய்து விடாமலும், ஊழலுக்கு துணை போகாத விதத்திலும் எங்களுடைய அரசியல் செய்து காட்டப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் இன்ஸா அல்லாஹ் எங்களுக்கு வாக்களிப்பாளர்கள், எங்களை இத்தேர்தலில் வெற்றியடைய செய்வார்கள் என்பதில் எங்களிடம் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என தெரிவித்தார் முன்னாள் மாகான சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்.

அத்தோடு ஷிப்லி பாரூக்கிடம் கேட்கப்பட்ட முக்கிய சமகால அரசியலுடன் தொடர்புபட்ட கேள்விகளுக்கு ஷிப்லி பாரூக் வழங்கிய பதில்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இக்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Previous Post Next Post