முஸ்லிம்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த ஹஜ் மானியத்தை இரத்துச் செய்வதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. சிறுபான்மைத் துறையினரின் நலனுக்குப் பொறுப்பான அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இதைத் தெரிவித்துள்ளார்.
“முஸ்லிம்களுக்காக வழங்கப்படும் இந்த மானியம் உரியவர்களால் அனுபவிக்கப்படுவதில்லை. இதையடுத்தே இந்த முடிவை எடுத்துள்ளோம்.
“முன்னெப்போதும் இல்லாத வகையில், இவ்வருடம் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை செல்லத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
“இவர்களுக்கான மானியத்தை இரத்துச் செய்வதன் மூலம், இதற்காகச் செலவிடப்படும் பணத்தை முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தவிருக்கிறோம்.”
இவ்வாறு நக்வி தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றும் நியமிக்கப்படவிருக்கிறது.