பாறுக் ஷிஹான்
வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காவிடின் அவர்கள் தமது உச்சக்கட்ட ஆத்திரத்தால் வடக்கு மாகாண முதலமைச்சரின் கொடும்பாவியை எரிப்பார்கள். அதற்கு வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற சங்கம் பொறுப்புக் கூறாது.
இவ்வாறு ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருட்பிராகசம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று(2) காலை நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
"வடபிராந்திய போக்குவரத்துச் சபையில் பணியாற்றும் ஒவ்வொரு பிரிவு தொழிற்சங்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஒன்றிணைத்ததே எமது சங்கம். நாம் பதிவு செய வதற்கான முயற்சிகளை எடுத்துவருகின்றோம்.
எமது சங்கத்தை அங்கீகரித்தே எம்மால் முன்னர் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மத்திய போக்குவரத்து அமைச்சு தீர்வுகளை வழங்கியது. எனவே பதிவு செய்யப்பட்டதா? என்று ஆராய்வது பொருத்தமற்றது. எமது கோரிக்கைகளுக்கான தீர்வைக் காண்பதே அவசியம்" என்று ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருட்பிராகசம் பதிலளித்தார்