தேர்தல் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அல்லாஹ்விடம் மிகப் பெரிய பாவியாக மாற வேண்டும் என எனக்கு எண்ணமில்லை என ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
சென்ற தேர்தல் காலங்களின் போது என்னென்ன வாக்குறுதிகள் வழங்கப்பட்டள்ளது, அவை அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டள்ளதா என்பதை முதலில் நீங்கள் பார்க்க வேண்டும்.
உதரணமாக பார்க்க போனால் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தை றோயல் கல்லூரியாக மாற்றுவோம் என கூறினார்கள் ஆனால் அதற்கு இன்னும் சிறந்த அதிபரை கூட நியமிக்கவில்லை. இதேபோல் கடற்கரைக்குள் நீச்சல் தடாகம் கட்டித் தருவோம் என கூறினார்கள் ஆனால் காத்தான்குடி ஒரு இடத்திலும் கூட நீச்சல் தடாகம் கட்டப்படவில்லை. ஆற்றங்கரையில் நவீன விளையாட்டு அரங்கு ஒன்றை கட்டித் தருவதாக கூறினார்கள் அதுவும் நடைபெறவில்லை.
மக்கள் மத்தியல் தேர்தல் காலங்களில் மேடைகளில் மாத்திரம் அதிகளவான பொய்யான வாக்குறுதிகளை அளித்து விட்டு நிறைவேற்றாமல் இருக்கும் அரசியல்வாதிகள் அனன்றும் தேர்தல் களத்தில் குதித்தள்ளனர். அதில் ஹிஸ்புல்லாஹ்வும் அடங்குகிறார். மக்கள் மத்தியல் எவ்வாறு பேசி வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நுட்பம் ஹிஸ்புல்லாஹ் நன்றாக தெரிந்து வைத்துள்ளார்.
சென்ற முறை அளித்த வாக்குறுதிகளே இன்னும் நிறைவேறாமல் இருக்கும் பட்சத்தில் மீண்டும் புதிய புதிய வாக்குறுகளை மக்களுக்கு அளித்து கொண்டு வருகின்றார்கள். சென்ற முறை போன்று இம்முறையும் ஏமாந்து விடாதீர்கள் என காத்தான்குடி மக்களிட்ம கேட்டுக் கொள்கின்றேன்.
சிலோன் முஸ்லிம் நிருபர்
வாஜித்