(ஹஸ்பர் ஏ ஹலீம்)
"உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்"எனும் தொனியில் நேற்று (23) செவ்வாய்க் கிழமை திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் கிண்ணியா பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன்போது கிண்ணியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.இரத்ததான வழங்கலின் போது விசேடமாக கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் மற்றும் கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் ஆகியோர்களும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.
இவ் இரத்ததான முகாமில் திருகோணமலை மாவட்ட இரத்த வங்கிப் பிரிவில் இருந்து வருகை தந்த டொக்டர் திருமதி தேவராசா மற்றும் டொக்டர் லாபீர் உள்ளிட்டோரூம் கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.