ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா உப்பாறு பாலத்துக்கு அருகாமையில் விரைவில் பொழுதுபோக்குக்கான பூங்கா அமைக்கப்படவிருப்பதாக கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார்.அண்மையில் கழிவுகளை தரம்பிரித்தல் தொடர்பான கிண்ணியா நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இவ் பொழுதுபோக்கு பூங்காவை அமைத்துத் தருவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.கிண்ணியாவை அழகுபடுத்துவதும் திண்ம முகாமைத்துவம் கழிவுகளை தரம்பிரித்து மக்களின் சுகாதார நலன்களை பேணுகின்ற திட்டங்களாக இவ்வாறான கழிவுகளை தரம்பிரித்தல் செயற்பாடு இடம்பெறுவது வரவேற்கத்தக்கது.
இதனால் கிண்ணியா நகர சபை எல்லைப் பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் கழிவுகள் குறைந்துள்ளதுடன் பொது மக்களின் முறைப்பாடுகளும் கணிசமான அளவு குறைந்துள்ளது கழிவுகளை தரம் பிரித்தல் தொடர்பில் உக்கும் உக்காத பொருட்களை வெவ்வேறாக தரம் பிரித்து எதிர்காலத்தில் கூட்டுப்பசளை தயாரிக்கும் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.
இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் தலைமையிலான குழுக்களுடன் மற்றும் சுற்றாடல் அதிகாரிகளின் ஒத்துழைப்புகளுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதனூடாக நஞ்ஞற்ற உணவு பாதுகாப்பான சுகாதார வாழ்க்கையினை கிண்ணியாவில் மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம் இதனால் கிண்ணியாவின் பல பிரதேசங்கள் சுத்தமான சூழலை உருவாக்குவதற்காக கழிவுகளை தரம்பிரித்து அதற்கான கழிவு தொட்டிகளும் வழங்கப்படவுள்ளன.
திண்மக் கழிவு முகாமைத்துவம் விரைவில் பொதுமக்களுக்கான செயலமர்வுகளை நடாத்தி அது தொடர்பிலும் விழிப்புணர்வுகளை கழிவுகளை தரம்பிரித்தல் தொடர்பிலும் விசேடமான செயற்பாடுகளை நடாத்தவுள்ளோம் . கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதியோரங்களில் நீர்தேங்கி நிற்றல் வடிகாண்களில் நீர்தேக்கம் குப்பைகளை அகற்றுவதிலும் பல சிக்கல்கள் மக்களிடமிருந்து காணப்பட்டது அதற்கான அதிரடி நடவடிக்கையாக எமது நகர சபை ஊழியர்களினால் கழிவுகளை அகற்றுப் பணி பல பிரதேசங்களிலுமிருந்தும் அகற்றப்பட்டன.
இதனால் மக்களின் முறைப்பாடுகளும் குறைவாக உள்ளது மேலும் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக நகர சபை காலத்தின் தேவை கருதி பல விரிவாக்கல் மக்களின் நலன்கருதிய நகராக்கத் திட்டங்களையும் செய்யவுள்ளோம் என்றார்.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் உட்பட கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம்,கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம்,கிண்ணியா உலமா சபை சூறா சபை தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா (நளீமி) கிண்ணியா பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.றியாத் வங்கி முகாமையாளர்கள் பாடசாலை அதிபர்கள் சனசமூக அபிவிருத்தி பிரதிநிதிகள் என மதஸ்தலங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்..