மொனராகலை மாவட்டம் பிபில நகரை அண்மித்த கொடபோவ கிராமத்தில் வாழும் முஸ்லிம்கள் மீது பெரும்பான்மையினர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில்
நேற்றைய தினம் பிபில நகர் பள்ளிவாயல் தலைவர் சென்ற வாகனத்தை இடைமறித்து சில பெரும்பான்மை விஷமிகள் தாக்கியுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிபில நகர பள்ளிவாயல் தலைவர் மாரடைப்பில் மரணமாகியிருந்த நிலையில் பிபிலை நகரில் சில பெரும்பான்மை வாலிபர்கள் பட்டாசு கொழுத்தி அதனை கொண்டாடிய அதேவேளை அங்கு முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
நேற்று இரவு பிபிலை நகரில் வர்த்தகத்தில் ஈடுபடும் தற்போதய பள்ளிவாயல் தலைவர் கொடபோவ நோக்கி திரும்பிம் வழியில் வாகனத்தை இடைமறித்து சில விஷமிகள் தாக்க முயற்சித்துள்ள அதேவேளை அவர்களது வாகனத்தை பின் தொடர்ந்து வந்து தாக்கு முயற்சித்துள்ள அதேவேளை
சில ஊர் பெரியவர்களின் தலையீட்டால் அப்போது அங்கு ஒரு ஏற்பட முருகல் நிலை தவிர்க்கப்பட்டுள்ள அதேவேளை பள்ளி தலைவரை பிந்தொடர்ந்து வந்த விஷமிகள் திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிபில நகரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கொடபொவ கிராமத்தில் 600 க்கும் அதிகமான முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்துவரும் நிலையில் ஹராடுமுல்ல எனப்படும் கிராமத்தில் உள்ள சில விஷமிகள் அவ்வழியே செல்லும் முஸ்லிம்களுக்கு கடும் இடையூறு ஏற்படுத்தி வருவதாக ஊர் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வரும் இந்த இடையூறுகளை பொலிஸார் அலட்சியப்படுத்தி வருவதாகவும் ஊர் முக்கியஸ்தர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.