றபீக் - சிலோன் முஸ்லிம் நிந்தவூர் செய்தியாளர்
மூன்று மொழிகளிலும் பேசத்தெரியாத அதாஉல்லா கட்சிகளுக்கு தலைமை தாங்க பொருத்தமற்றவர் அதை அவர் அன்றே நிரூபித்தார் அதனாலேயே ஹக்கீமை அவர் தலைவராக்கினார் என பிரதியமைச்சர் பைசால் காசீம் தெரிவித்தார்,
நேற்று முஸ்லிம் காங்கிரசின் பொதுக்கூட்டம் இடம்பெற்றது இதில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார், மேலும் உரையாற்றிய அவர்,
ஊருக்குள் மட்டுப்படுத்தப்பட்ட கட்சியொன்றை தன் வசம் வைத்துக்கொண்டுள்ள அதாஉல்லா அன்று முஸ்லிம் காங்கிரசுக்கு தலைவராகியிருக்கலாம் அன்று அவருக்கு அதற்குரிய திராணி இருந்திருக்கவில்லை, மூன்று மொழிகளில் பாண்டித்தியம் இல்லை இன்னும் பலவிருக்கிறது அது பேசத்தேவையில்லை இன்று அவர் ஹக்கீம் சரியில்லை என்று கூறுகிறார், நீங்கள் தானே தெரிவு செய்தீர்கள் அன்று எங்கே போனது உங்கள் புத்தி, நீங்கள் சுகபோகம் அனுபவிக்க பிரிந்தீர்கள், அனுபவித்தீர்கள் இன்று வரை அனுபவிக்கிறீர்கள் அன்று உங்களிடம் சொகுசு வாகனம், கொழும்பில் வீடு இருந்ததா எல்லாம் இந்த பிரிவில்தான் நீங்கள் பெற்றது. இன்று மக்களை ஏமாற்ற கட்டுக்கதை சொல்கிறீர்கள். என்றார்.