ஜனாதிபதி தலைமை வகிக்கும் எனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலோ அல்லது எனது தனிப்பட்ட அரசியலிலோ ஊழல் மோசடிகளுக்கு அறவே இடமில்லை.
எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதுதான் எமது இலக்காகும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் தெரிவித்தார்.
இன்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு கந்தபுரம் 11ம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் எஸ்.முரளி மற்றும் எஸ்.கேதீஸ்வரன் ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இக்கருத்துக்களை தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது,இந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின் எனது அலுலகமான வவுனியா 'ரம்யா ஹவுஸ்' இருபத்திநாலு மணி நேரமும் மக்கள் பணிக்காக திறக்கப்பட்டிருக்கும்.
அங்கே மக்கள் பணிக்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மக்கள் பணிக்காக காத்திருக்கும் நிலையை உருவாக்குவோம்.
ஆகையால் தேர்தல் நேரங்களில் மாத்திரம் உங்கள் வீட்டுக்கு வரும் அரசியல்வாதிகளையிட்டு நீங்கள் மிகக்கவனமாக இருந்து எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின் இறுதியில் கந்தபுரம் பிரதேசத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு