Top News

கல்முனை மாநகர சபையின் ஆட்சியை நாம் கைப்பற்றுவோம்



(றியாஸ் இஸ்மாயில்) 

சாய்ந்தமருதுலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அடியோடு அழிப்பதற்கு போடுகின்ற சதித்திட்டங்களை மக்கள் விளங்கியுள்ளனர்.கல்முனை மாநகர சபையின் ஆட்சியை நாம் கைப்பற்றுவோம் என கல்முனை மாநகர சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சாய்ந்தமருது 23ம் வட்டாரத்திற்கான வேட்பாளரும் கட்சியின் மூத்த போராளியுமான சமூகநேயன் ஏ.எம்.முபாறக் தெரிவித்தார்.

இன்று (08) காலை வேட்பாளரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு தெரிவிக்கையில்,

சாய்ந்தமருது பிரதேச சபையை பெற்றுக் கொள்வதற்கான முரண்பாடே தவிர இவ்விடயம் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பையும் தாக்கத்தையும் செலுத்ததாது மாற்றுக் கட்சியினரின் திட்டமிடல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சதிகள் மக்களுக்கு மிக விரைவில் தெரியவரும் இவைகள் எல்லாம் நாடகங்கள் வெளிச்சத்திற்கு வரும் பலரின் நடிபாகங்கள் தெரியவரும்.

இத்தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தின் 23ம் வட்டாரத்தில் கிராமப்பிரிவுகள் 14ம்,16ம்,17ம் உள்ளடங்களாக போட்டியிடும் நான் இலகுவாக வெற்றி பெற்றுவேன் ஏனெனில் இவ்வட்டாரத்தில் மக்கள் மிகத் தெளிவாக  உள்ளனர் இவ்வட்டாரத்தில் மக்களின் பல்வேறுபட்ட தேவைகளை நிறைவேற்றி வழங்கக் கூடியவராக நான் செயற்படுவேன் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி நடைபெறவுள்ள கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சாய்ந்தமருது வட்டாரத்திலுள்ள ஆறு வேட்பாளர்களும் வெற்றி பெறுவர் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.நான் இவ்விடயத்தினை அடித்துக் கூறுவேன்.

கல்முனை மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தினை 25 மேற்பட்ட ஆசனங்களைப் பெற்று நாங்கள் ஆட்சியமைப்போம் மக்கள் எங்களுடன் உள்ளனர் மாற்றுக் கட்சியினர் இங்கு தோல்வியடைவர்கள் இவர்களினால் ஒரு போதும் ஆட்சியமைக்க முடியாது இவர்களின் சதிகளுக்கு மக்கள் தேர்தலின் ஊடாக நல்ல பாடம் புகட்டுவார்கள்.

எமது தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் ஊடாக சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான பிரதேச சபையை பெற்றுக் கொடுப்போம் இதற்கான சகல நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் எனது வெற்றிக்காக இளைஞர்கள் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் ஏனைய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர் இவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Previous Post Next Post