Top News

கோத்தபாயவின் கைது தொடர்பில் உண்மையை வெளிப்படுத்திய மைத்திரி!



முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கைது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார்.
கோத்தபாயவை கைது செய்வது தொடர்பில் என்னிடம் கோரப்பட்டது.

திறமையான நீதிபதிகளை தெரிவு செய்த பின்னர், நான் அல்லது பிரதமர் நாட்டில் இருக்கும் போது கோத்தபாயவை கைது செய்யுமாறு அறிவுரை வழங்கியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட மற்றும் ரகர் வீரர் வசீம் தாஜுடீனின் கொலை வழக்கு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.மூன்று வழக்குகளும் நிறைவு செய்வதற்கு தாமதப்படுத்துவது தொடர்பில் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு அந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் யாவும் நிறைவடைந்து விட்டதாகவும், இன்னுமொரு வாரத்தில் இது தொடர்பில் வழக்கு தொடர முடியும் என துறைசார் அதிகாரிகள் கூறியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எதிர்வரும் காலங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் தப்பிக் கொள்வதற்காக ஆபத்தான கூட்டணிகள் தற்போது உருவாகியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக் கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோத்தபாயவுக்கு ஆலோசனை வழங்கியதாகவும், இதன் காரணமாக கோத்தபாய அமெரிக்காவுக்கு தப்பியோடியுள்ளதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த குற்றச்சாட்டு அரசியல் மேடைகளில் வலுப்பெற்றுள்ள நிலையில், ஜனாதிபதியின் கருத்து வெளியாகி உள்ளது.
Previous Post Next Post