இது எம்முடன் இருந்த மைத்திரியா? என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார். கொடகவெல பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கூறுகையில்,
வெளிநாடுகளில் இருந்து மிளகு கொண்டு வருவதால் தான் அதன் விலை குறைவடைந்துள்ளமையானது மூன்று வருடங்களுக்கு பின்னர் தான் ஜனாதிபதி மைத்திரிக்கு தெரிந்துள்ளது. இந்த நிலையில் அவர் கூறுகிறார் எதிர்வரும் பத்தாம் திகதி நான் அதனை நிறுத்துவேன் என. நானாக இருந்தால் அதனை இன்றே நிறுத்துவேன்.
இது எம்முடன் இருந்த மைத்திரியா? இல்லை இருக்காது. இந்த நிலையில் எங்களிடம் கேட்கிறார்கள் எங்களுடன் இணைகிறீர்களா என்று. இப்பொழுது பாருங்கள் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நிலையை.
சிறிய குழந்தையொன்று பசிக்காக கேவைக்காய் உண்டு இறந்துள்ளது. இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு சொல்ல வேண்டும்? என கேள்வியெழுப்பியுள்ளார்.