முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பலாங்கொடையில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், “மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோக மோசடி அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையை முழுமையாக ஆராய வேண்டும். அதன் பின்னர் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரப்படவுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சாதாரண நம்பிக்கையில்லா பிரேரணையாக இருக்காது.
அது ரவி கருணாநாயக்கவை வீட்டுக்கு அனுப்பும் நம்பிக்கையில்லா பிரேரணையாகவே அது இருக்கும்” என மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.