றிம்சி ஜலீல்
குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் மாநகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்தில் வெஹர வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் அஸார்தீன் அவர்களின் காரியாலய திறப்பு விழா (18) இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் சதொச பிரதித்தலைருமான M.N.நஸீர் (MA) மொய்னுதீன் ஹாஜியார், முன்னாள் மு.கா. கட்சியின் குருநாகல் நகர அமைப்பாளரும், தறபோதைய அ.இ.ம.கா. கட்சியின் பட்டியல் வேட்பாளருமாகிய இக்பால் ஷரீப்தீன், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் செயளாலர் அலி மேயர் மற்றும் குருநாகல் மாநகர எல்லையில் போட்டியிடும் வேட்பாளர்களும் பங்கு கொண்டனர்.