மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாகத்தில் பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தின்போது , காத்தான்குடி பிரதேசம் டெங்கு அபாய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இதன்போது காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நசிர்தீன், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.ஜாபீர், காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி றிப்கா ஷபீன், பொலிஸார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காத்தான்குடியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவை டெங்கு அபாய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுவதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 117 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியதாக காத்தான்குடி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.