பிரபல தனியார் கல்லுாரி ஒன்றின் உரிமையாளரும், நல்லாட்சி்க்கான தேசிய முன்னணி என்ற கட்சியின் சொந்தக்காரருமான றஹ்மான் இன்று உழலுக்கெதிராக அரசியல் செய்வதை பார்க்கையில் சிரிப்பாகவுள்ளதாக எஸ்.எம் சபீஸ் குறிப்பிட்டுள்ளார்.
சிலோன் முஸ்லிமின் கேடயம் சிறப்பு நேரலைக்கு வருகை தந்த சபீஸ் இந்த கருத்தை குறிப்பிட்டார்,
குறித்த கல்வி நிலையத்தின் சான்றிதழ்கள் வெளிநாட்டு அமைச்சில் தேங்கி கிடந்த நிலையில் அரசியலுக்கு வந்தார் றஹ்மான், இது சிறாஜ் மசூருக்கு தெரிந்திருக்க வாய்பில்லை, உண்மை என்ன வென்றால் தன்னுடைய சுய இலாபத்திற்காக அரசியலுக்கு வந்த றஹ்மான் இன்று இப்படி பேசும் புாது சிரிப்பாக இருக்கிறது என்றார்