(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கை வங்கி வீதி லெத்தீப் விதான் வீதியில் உள்ள ஐ ஸ்டூடியோ உரிமையாளரும்ஆசிரியருமான ஏ.ரம்சான் ஆசிரியரின் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு இனந்தெரியாத விசமிகளால் இன்று (23) நள்ளிரவு 1.15 மணியளவில் தீவைக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தூங்கும் நேரத்தில் தீப்பற்றி எறியூம் வாசனை வருவதையிட்டு வெளியில் வந்து திடீரென்று எழுந்து வந்ததும் தீபற்றி எரிவதைக் கண்ட குறித்த நபர் குறித்த டிஸ்கவரி மோட்டார் சைக்கிளை வெளியில் வந்து கண்டு கொண்டதாகவும் பின்னர் நீரினால் அனைத்தார் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் இருந்து தீப்பற்றி வந்ததையடுத்து தீப்பற்றுவதை அனைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இருவர் முகத்தை மூடி மறைத்து வந்து தனது மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டு கொழுத்தியுள்ளதாகவும் இது தொடர்பான கானொளி தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள சீசீ டீவி கெமராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.