1991 ஆண்டு உள்ளூராட்சி தேர்தல்
முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட்டது. தெல்தோட்டையில் பலரும் போட்டியிட்டனர். ஆனால் உடுதெரியை சேர்ந்த ஹில்மி பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை க்கு சென்றார்.
*தெல்தோட்டைக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்..*
*1997 உள்ளூராட்சி மன்ன தேர்தல்*
மு.கா. சந்திரிக்காவின் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் கூட்டிணைந்து கதிரை சின்னத்தி போட்டியிட்டு உடுதெனியை சேர்த ஹில்மி சபைக்கு செல்கிறார்.
*தெல்தோட்டைக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்...*
2000 ஆம் ஆண்டு பெதுத் தேர்தல்
கண்டியில் மரம் ஊன்றப்பட்டது, ஹக்கீம் மரச்சின்னத்தில் தனித்து போட்டியிட்டு 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றார். இதன்போது, போபிடியை சேர்ந்த டாக்டர் குவைலித் (ஹக்கீமின் மனைவியின் உறவுக்காரர் என கூறப்படுகின்றது) பிரதேசத்திலிருந்து போட்டியிட்டு ஹக்கீமுக்கு வாக்கு பெற்றுக்கொடுத்தார்.
*தெல்தோட்டைக்கு ஏமாற்றத்தை தவிர எதுவும் கிடைக்கவில்லை...*
2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்
மு.கா.வின் யானை சவாரி ஆரம்பம். அஷ்ரப் யாரென்று அறியாத தெல்தோட்டை மக்கள் அவரின் விபத்து மரணத்தின் பின்னர் அனுதாப அலையில் சங்கமிக்கின்றனர். ஹக்கீம் தெல்தோட்டை மக்களை உணர்வுபூர்வமாக தட்டியெழுப்புகிறார். தெல்தோட்டையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் யானை சின்னத்தில் போட்டியிடும் ஹக்கீமுக்கும் ஒருபுள்ளடியிடுகின்றனர். அத்தோடு தெல்தோட்டையில் ஓர் உயிரையும் பலிகொடுக்கின்றனர்.
*தெல்தோட்டைக்கு பெரும் ஏமாற்றம் மட்டுமே மிச்சம்...*
2002 உள்ளூராட்சி சபை தேர்தல்
யானை மீதான சவாரியில் தேல்தோட்டையிலிருந் உவைஸ் வெற்றி பெறுகின்றார். ஒரு கட்டத்தில் பிரதி தவிசாளராகவும் செயற்படுகின்றார்.
2004 மாகாண சபை தேர்தல்:
யானை சவாரி வந்த ஹக்கீம் "உங்கள் ஊர் கார என் மச்சான்" என கூறி அழைந்துவந்து ஊருக்கு நயீமுல்லாவை அறிமுகப்படுத்துகின்றார். ஊர் காரர் என்ற அலை தெறிக்க, மக்களும் மதி மயங்குகின்றனர். அவர் குடும்பத்தை ஆட்சிப்பீடமேடமேற்றி அழகுபார்த்ததை யாரும் அறியவில்லை.
*எஞ்சுகிறது ஏமாற்றம், தெல்தோட்டையின் அவலம் தொடர்கிறது...*
2006 உள்ளூராட்சி சபை தேர்தல்
யானையில் சங்கமிக்கிறது மு.கா. ஆனால் மக்கள் பாடம் புகட்டுகின்றனர். மு.கா. வினர் எவரும் வெற்றிபெறவில்லை.
*தெல்தோட்டை மக்கள் சுதாகரித்துக்கொள்கின்றனர்...*
2009 மாகாண சபை தேர்தல்
நயீமுல்லாவை யானை சவாரியில் கொண்டுவந்து மீண்டும் படத்தை அரங்கேற்றுகிறார் ஹக்கீம், தெல்தோட்டையிலிருந்து வாக்குகள் சென்றாலும் கண்டி மக்கள் ஹக்கீமின் குடும் அரசியலுக்கு ஆப்பு வைக்கின்றனர்.
*மர்ஜான் மாஸ்டர் சபைக்கு சென்றார். தெல்தோட்டை மக்களின் கண்ணீர் கதை தொடர்கிறது...*
2010 பொதுத் தோர்தல்
ஹக்கீம் மீண்டும் கண்டி களத்தில் குதிக்கிறார். யுத்த வெற்றிக்கு பின் முஸ்லிம்களும் மஹிந்த பக்கம் திரும்பிப் பார்த்தநிலையில் கண்டி முஸ்லிம்களே வழக்கம்போல யானையையே நம்பியிருந்தனர். ஹக்கீமும் அதனை புரிந்துகொண்டு களத்திலிறங்கி ஜெயிக்கிறார்.
*தெல்தோட்டை மக்களோ வெறுமனே வாக்குகளை மாத்திரம் அளித்து விட்டு எதுவும் இன்றி இருந்தனர்....*
2011 உள்ளூராட்சி சபை தேர்தல்
பொதுத் தேர்தலில் முகா. யானை வென்று மஹந்தவின் மடியில் கிடந்ததால் ஐ.தே.க.வில் சங்கமிக்க முடியாது போகிறது. இதனால் தெல்தோட்டையிலும் கலஹாவிலும் உடுதெனியவிலுமாக 25 வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர். இந்த பட்டியலில் மஹிந்த சார்பானவர்களும் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 1000 வாக்குகளை பெற்று முஹர்ரிக் மாத்திரம் தெரிவாகிறார்.
2013 மாகாண சபை தேர்தல்
மஹிந்த அரசுக்குள் இருந்துகொண்டு போலியாக அவ்வரசை விமர்சித்துக்கொண்டு மு.கா. மரச்சின்னத்தில் களமிறங்குகின்றது. பிரதேச சபை உறுப்பினர் முஹர்ரிக், மற்றும் யாசின் என்போர் வேட்பாளராகின்றனர். ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியிலிருந்து 1303 வாக்குகளை முகாவுக்கு பெற்றுக்கொடுக்ன்றனர். ஆனால், திட்டமிட்டு எமக்து பிரதேசத்துக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் இரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் மஹிந்த தீவிர ஆதரவாளர் உவைஸ் ஹாஜியாருக்கு வழங்கப்படுகின்றது. கண்டி மாவட்டத்தில் உடுநுவரயில் 5 வீத வாக்குகளையும் ஹேவாஹெட்டயில் 3 வீத வாக்குகளும் கிடைக்கின்றன. ஏனைய இடங்களில் 2 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே கிடைக்கப்பெறுகின்றன.
*தெல்தோட்டை மக்களின் முதுகில் குத்தி பலத்த கயாம் ஏற்படுத்தப்படுகின்றது...*
2015 பொதுத் தேர்தல்
முஸ்லிம்கள் மஹிந்த எதிப்பின் உச்சத்தில் இருந்த காலம், கண்டியில் காதர் ஹாஜியார் வெற்றிலையை கையில் எடுத்தமை யானையில் ஹலீம் மட்டுமே இருந்தார். ஹக்கீம் மீண்டும் யானையில் களமிறங்க, மற்றுமொரு முஸ்லிம் வேட்பாளருக்கு யானை பட்டியலில் இடமளிக்கக் கூடாது என்று ரணிலுடன் ஒப்பந்தமொன்றை போட்டுக்கொள்கிறார். இதனால், லாபிர் ஹாஜியாலருக்கு அல்லது இம்தியாஸ் பாகிர் மாக்காரின் புதல்வருக்கு கண்டியில் களமிறங்கு வாய்ப்பு திட்டமிட்டு அச்சத்தின் காரணமாக இல்லாமல் போகிறது. வேறு வழியின் ஹக்கீமுக்கு ஆதரவளிக் வேண்டிய நிலைக்கு தெல்தோட்டை மக்கள் தள்ளப்படுகின்றனர்.
*இன்னும் ஏமாற்றமும் கைகழுவப்படலும் எம் மக்களுக்கு மிஞ்சுகின்றது.....*
2015 ஆண்டு ஹக்கீமுக்கு நீர் வழங்கள் வடிகானமைப்பு அமைச்சு பதவி கிடைக்கிறது. ஆனால், அன்றுமுதல் இன்று வரை ஹக்கீம் தெல்தோட்டைக்கு தண்ணீர் காட்டுகிறார்....
ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியில் பல இடங்களில் சாந்திணியுடன் இணைந் நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஹக்கீமால் ஏன் இன்னும் தெல்தோட்டைக்கு தன்னீர் வழங்க முடியாதிருக்கிறது. ஹக்கீமிடம் எதிர்த்து நிற்கும் இனவாத மக்களை சமாளிக்கும் ஆற்றல் இல்லை, ஆளுமை கிடையாது. நலுவத் தெரிகிறது. ஏமாற்றத் தெரிகிறது.
குர்ஆனையும் ஹதீஸையும் மையப்படுத்திய கட்சியின் தலைவராக இருக்கும் அவர் முனாபிக்குக்கு இருக்க வேண்டிய அத்தனைபன்பையும் கொண்டிருக்கிறார். நாம் எப்படி அவரை நம்புவது. அவரின் வேட்பாளரை நம்புவது.
நேற்றுமுன்தினம் முஸ்லிம் கொலனியில் நடைபெற்ற கூட்டத்தின் போது, யானை சின்னத்தில் போட்டியிடும் மு.கா. வேட்பாளர் தெல்தோட்டைக்கு நீரை பெற்றுக்கொடுப்பதாக கூறியிருந்தார். வெறும் அரசியல் இலாபத்துக்கான வாய்ச்சவாடல் விடுகின்றமை தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது. இதும் வெறும் அரசியல் படம். யார் இந்த கதையளாப்புகளை நம்புவது.
இம்முறையும் ஏமாந்து போகாமல், பெப்ரவரி 10 ஆம் திகதி யானை வேடமிட்டு வந்திருக்கும் மு.கா.வுக்கு நல்லதொரு பாடத்தை முஸ்லிம் கொலனி, தெல்தோட்டை நகர், பத்தாம்பள்ளி, கோணங்கொட, கிறுவனாகெட்டிய, பியசேனபுரவிலுள்ள புத்திசாலியான மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது.
*தண்ணீர் காட்டும் அரசியலுக்கு தக்க பாடம் புகட்ட காத்திருக்கின்றனர் தெல்தோட்டை மக்கள்...*
எஸ்.என்.எம்.ஸுஹைல்