ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
வீடியோ வேட்பாளர் காதருடைய கருத்துக்கள் -
www.youtube.com/watch?v=G4mrF-dHvHM&feature=youtu.be
அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் சம்மாந்துறை பிரதேச சபைக்காக மயில் சின்னத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான நெளசாட் மஜீத் தங்களுக்கு எவ்வித சவாலும் அற்றவர் என்பது ஒரு புறமிருக்க இம்முறை சம்மாந்துறை பிரதேச சபையினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிக இலகுவாக கைப்பற்றுகின்றது என நெளசாட் மஜீத் களமிறங்கியுள்ள வாட்டாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் காதர் தெரிவிக்கின்றார்.
சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் முக்கிய வட்டாரமாக காணப்படுகின்ற இரண்டாம் வட்டாரம் அல்லது வீரமுனை வாட்டாரம் என அழைக்கப்படும் வட்டாரமானது அதிகளவான தமிழ் சகோதர மக்களின் வாக்குளையும் உள்ளடக்கிய ஒரு வட்டாரமாக காணப்படுகின்றது. அத்தோடு குறித்த வட்டாரமானது மூன்று உறுப்பினர்களை கொண்ட வட்டாரமாகவும் சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் காணப்படுகின்ற விடயமானது பிரதேச சபையினை கைப்பற்றும் விடயத்தில் குறித்த வட்டாரத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் ஆதிக்கம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதே முக்கிய அரசியல் எதிர்வு கூறலாகும்.
இந்த வகையிலே குறித்த வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் களமிறக்கப்பட்டுள்ள முக்கிய வேட்பாளர்களான காதர், முஸ்தபா சட்டத்தரனி, றம்சின் காரியப்பர் ஆகியோர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நெளசாட் மஜீத்துக்கு எந்தளவில் சவலாக அமையபோகின்றார்கள். என்ற கேள்வியினை காதரிடம் தொடுத்த பொழுது அவர் கூறியதாவது… என்னை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை வீரமுனையின் வீரமகன் என பெயர் சூட்டி களமிறக்கியுள்ளது. அது ஒரு புறமிருக்க இரண்டாம் வட்டாரத்துக்கே சொந்தமில்லாத நெளசாட் மஜீத் என்பவர் யார் என்பதனை மக்கள் நன்கறிந்தவர்களாக இருக்கின்றார்கள்
அவர் இன்று ஒரு கட்சியில் இருப்பார். நாளை ஒரு கட்சியினை பிரதி நிதித்துவப்படுத்துவதாக ஊடகங்களுக்கு கூறுவார். நாளை மறு தினம் அவர் எந்த கட்சியினை பிரதி நிதித்துவப்படுத்துவார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இந்த நிலையில் அவருடைய வருகையானது எங்களுக்கு எவ்வித சவாலினையும் கொடுக்க போவதில்லை.
ஆனால் நெளசாட்டும் அவரை களமிறக்கியவர்களும் சம்மாந்துறை மக்களை மடையர்களாக கருதி எவ்வாறாவது முஸ்லிம் காங்கிரசினை சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து ஒழித்து கட்டிவிடலாம் என தப்பு கணக்கு போடுகின்றனர். ஆனால் சம்மாந்துறையில் இருப்பவர்கள் புத்திசாலிகள், படித்தவர்கள், சுய சிந்தனையுடன் செயலாற்ற கூடியவர்கள் என்பதனை அவர்கள் இன்னும் விளங்கிகொள்ள வில்லை. இருந்தும் பிற ஊர்களில் உள்ள அரசியல் தலைமைகளின் ஏஜெண்டுகள் இங்கே கூலிக்கு மாறடிப்பதினால் அப்பாவி பொது மக்கள் அவர்களுக்கு இரையாகி கடந்த காலங்களிலே எமது பிரதிந்திதுவத்தினை பெற்றுகொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைமை எங்களுக்கு ஏற்பட்டது. அதனை மக்கள் தற்பொழுது நன்கறிந்தவர்களாக இருக்கின்றார்கள்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் சம்மாந்துறை பிரதேசத்தில் இவ்வாறான அரசியல் வாதிகளினுடைய ஏஜெண்டுகளின் ஊடுருவலினால் சம்மாந்துறை மக்கள் 15000க்கும் அதிகமான வாக்குகளை மாற்று கட்சியினருக்கு வழங்கியிருந்தும் சம்மாந்துறை அரசியல் அதிகாரமிக்க பிரதி நிதித்துவத்தினை அவர்களால் பெற்றுத்தர முடியாத காரியமாகவே அமைந்திருந்தது. ஆனால் மறு பக்கத்தில் முஸ்லிம் காங்கிரசிற்கு சுமார் 4000 வாக்கள் வழங்கப்பட்டிருந்தும் எமது கட்சியின் தலைமையின் சானக்கியத்தினால் எமது மண்ணுக்கு பாரளுமன்ற பிரதி நிதித்துவத்தினை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
இதிலிருந்து விளங்கிகொள்வது என்னவென்றால்.? ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினால் மட்டுமே சம்மாந்துறைக்கான அரசியல் அதிகாரத்தினை பெற்றுத்தர முடியும் என்ற வெளிப்படையான விடயமாகும். அதே போன்றே கடந்த காலங்களில் தற்பொழுது முஸ்லிம் காங்கிரசினை தோற்கடிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு களமிறங்கியுள்ள நெளசாட் மஜீத் கூட பாராளுமன்றம் சென்றார் என்றால்.! அது முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகத்தான் என்பதனை அவர் மறந்து விட்டார் என்பதே கவலைக்குறிய விடயமாக இருக்கும் அதே இடத்தில் அவருடைய சின்னப்பிள்ளைத்தனமான அரசியல் முதிர்ச்சியினையும் எடுத்துக்காட்டுகின்றது.
ஆகவே கடந்த காலங்களின் அரசியல் வாதிகளின் ஏமாற்று வித்தைகளை நன்கறிந்துள்ள எமது மக்கள் இம்முறை நான் போட்டியிடுக்கின்ற இரண்டாம் வட்டாரத்தில் களமிறக்கப்பட்டுள்ள எங்கள் மூவரையும் வெற்றியடைய செய்து சம்மாந்துறை பிரதேச சபையினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதற்கு பெரும் ஒத்துளைப்பு வழங்க்குவார்கள் என்பதனை இவ்விடத்தில் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு இத்தேர்தலானது நெளசாட் மஜீத் போன்ற அரசியல் தூர நோக்கு சிந்தனை அற்வர்களுக்கு தகுந்த பாடத்தினை கற்பிற்கும் என்பதனையும் இங்கே கூறிக்கொள்ள விரும்புகின்றேன் சம்மாந்துரை இரண்டாம் வாட்டார வேட்பாளர் காதர்.
சம்மாந்துறை வீரமுனை வேட்பாளர் காதர் வளங்கிய நேர்காணலின் விரிவான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.