சாய்ந்தமருது பள்ளிவாசல் கீழ் இயங்குவதாக அறியப்படும் மக்கள் பணிமனையை உடன் மூடுமாறு தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளதாக சாய்ந்தமருததில் முஸ்லிம் களமிறங்கியுள்ள மு.கா வேட்பாளர் யஹியாகான் சற்று முன்னர் தெரிவித்தார்.
பொது இடத்தினை பயன்படுத்தி அரசியல் செய்வதாக பள்ளிவாசல் நிருவாகமும் கண்டிக்கப்பட்டுள்ளது, மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்க முஸ்தீபாகியுள்ளதாக குறிப்பிட்டார். இன்று தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் சாய்ந்தமருதுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.