Top News

சிறுவர்களை அரசியலில் ஈடுபடுத்துவதை கண்டால் 1929 இற்கு அறிவியுங்கள்- அதிகாரசபை



அரசியல் விவகாரம் தொடர்பில் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டாம் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சகல அரசியல் கட்சிகளிடமும், சுயாதீனக் குழுக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர்கள் பல்வேறு உத்திகள் மூலம் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுத்தப்படுவதாக அதிகார சபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதன்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை அறிவித்துள்ளது.
சிறுவர்கள் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுத்தப்படுவதனால், அவர்கள் உடலியல் ரீதியாகவும், மானசீக ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால், இது போன்ற நடவடிக்கைகள் எங்காவது இடம்பெறுவதை யாராவது கண்டால், 1929 என்ற இலங்கை சிறுவர் தொலைபேசி சேவைக்கு உடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி சட்டத்தரணி மிரினித லிவேரா பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Previous Post Next Post