Top News

மாவடிப்பள்ளியில் பாற்சோறு வழங்கி 2000 பேருடன் மகிழ்வுறும் நிகழ்வு; மாவடிப்பள்ளியை மயில் ஆளும் - ஜலீல்

எம்.வை.அமீர்
கடந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது காரைதீவு பிரதேசசபைக்காக மாவடிப்பள்ளி வட்டாரத்தை மையப்படுத்தி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த எம்.ஜலீலும் அவரோடு இணைந்து தேர்தல் களத்தில் பணியாற்றியவர்களும் ஒன்றுகூடி 2000 பேருக்கு உணவு வழங்கி மகிழ்வுறும் நிகழ்வு 2018-02-25 ஆம் திகதி மாவடிப்பள்ளி புர்க்கானியா (சியாரத்) வளவில் இடம்பெற்றது.
மாவடிப்பள்ளியின் வரலாற்றில் தேர்தல் ஒன்றை முகங்கொடுத்து மாவடிப்பள்ளி மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட மண்ணின் மைந்தனான ஜலீல், மாவடிப்பள்ளி கிராமத்தின் வரலாற்று நாயகனாகிறார்.
பல்வேறு எதிர்பிரசாரங்களுக்கு முகங்கொடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியூதீனின் வழிகாட்டலின் கீழ் வெற்றியை தனதாக்கிக்கொண்ட ஜலீல், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாவடிப்பள்ளி கிராமத்தை, பிரதேசசபையின் அதிகாரத்தின் கீழ் செய்யக்கூடிய  உச்சகட்ட அபிவிருத்திகளை செய்வதுடன் அமைச்சர் றிஷாட் பதியூதீனுடைய அதி உச்ச அதிகாரத்தையும் பயன்படுத்தி மாவடிப்பள்ளி கிராமத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் இங்கு மக்கள் முன்னிலையில் வாக்குறுதியளித்தார்.
தேர்தலின்போது தனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜலீல், எதிர்காலத்தில் கட்சிபேதம் பாராது எல்லோரும் இணைந்து மாவடிப்பள்ளியைக் கட்டியெழுப்ப முன்வருமாறும் இங்கு அழைப்பு விடுத்தார்.
குறித்த விருந்துபசார நிகழ்வில் பள்ளிவாசல் பிரமுகர்கள், உலமாக்கள் வைத்தியர்கள், ஊர்ப்பிரமுகர்கள், ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Previous Post Next Post