இன்று அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 2564 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 504 பேர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 720 பேரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த 04 பேரும் வேறு பல குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 741 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சுற்றிவளைப்பின் போது ஹெரோய்ன் மற்றும் வேறு விதமான போதைப்பொருட்களை வைத்திருந்த 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.