Top News

சிரியாவில் 400 பேர் பலி



சிரிய நாட்டில் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து அரசாங்க படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதலில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 400யிற்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து அரச ஆதரவுப் படையினர் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்தும் கடும் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலில் பெருமளவு பொதுமக்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, தாக்குதலை உடன் நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post