தங்களது கோரிக்கைகளுக்கு அரசு நியாயமான தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டும் என அரசை வலியுறுத்தும் விதத்தில் அனைத்துப் பல்கலைக்கழக உழியர்கள் சங்கம் மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைவாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் 2018-02-06 ஆம் திகதி ஒலுவிலில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்க தலைவர் எம்.எம். நௌபர் தலைமையில் இடம்பெறுகிறது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஊழியர் சங்கதலைவர் நௌபர்,
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சம்மேளனம் 2016 ஜூலை 27 ஆம் திகதியிலிருந்து தேசிய பல்கலைக்கழகத்தினுள் செயற்படுத்தப்பட்ட தொழில் போராட்டம் உயர் கல்வி மற்றும பெரும் தெருக்கள் அமைச்சருடைய மற்றும் இராஜாங்க அமைச்சருடைய பங்குபற்றுதலுடன் ஊடக கலந்துரையாடல் நடாத்தி உயர் கல்வி மற்றும் பெரும் தெருக்கள் அமைச்சின் செயலாளர் கையொப்பமிட்டு வழங்கிய இணக்கப்பாட்டுக் கடிதத்தினை அடிப்படையாகக் கொண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அந்த இணக்கப்பாட்டிற்கு அமைய MCA கொடுப்பனவை வருடாந்த அதிகரிப்பு 2021 வருடமாகும் போது 100% வரை அதிகரிப்பதற்கு இணங்கிக் கொண்டு இருந்தும் அதற்குரியதை 2018 ஜனவரியில் அதிகரிப்பதற்குரியதாக சுற்றுநிருபம் இதுவரையும் வழங்கப்படவில்லை என்பதுடன் ஏனைய அநேகமான இணக்கப்பாடுகளையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
இணக்கப்பாட்டு கடிதத்தில் இடை நிறுத்கப்பட்டிருந்த மொழிக் கொடுப்பனவு, சொத்துக்கள் கடன் எல்லையை விலக்குதல், வைத்திய காப்புறுதி முறைமை, முறையான ஓய்வூதிய முறையினை ஸ்தாபித்தல், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு சுற்றுநிருப இலக்கம்15/2017 யை இரத்துச் செய்து பதவி உயர்வுக்காக இருக்கின்ற எல்லையினை விலக்குதல், 17/2016 சம்பள சுற்றுநிருபம் மூலம் சம்பளத்தினை அதிகரிக்கும் போது பல்கலைக்கழக சேவைக்கு நிகழ்ந்துள்ள இறக்கங்களை விலக்குதல் மற்றும் ஆட்சேர்ப்புச் சட்டங்களை மீளாய்வு செய்தல்.
அது போன்று பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் நினைத்தபடி நடவடிக்ககைகளை மேற்கொண்டு பல்வேறு சுற்றுநிருபங்கள் மூலம் இது வரையும் அனுபவித்த சேவை உரிமைகளை மற்றும் வரபிரசாதங்களையும் வெட்டுதல் மற்றும் 08வருடங்களுக்கு அதிக காலம் ஆரம்பித்த பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் உயர் உத்தியோகத்தர்கள் அதாவது மேலதிக செயலாளர்கள் 3 பதவிகள் (மனித வளப் பிரிவு, உட்பிரவேசப் பிரிவு,கல்வி நடவடிக்கை பிரிவு) நிதி நிர்வாகம்/ பிரதான கணக்காளர்,பிரதான உள்ளக கணக்காளர், மற்றும் பிரதி செயலாளர்கள் பதவி வெற்றிடங்கள் நிரப்பாமை மற்றும் ஏனைய நடவடிக்;கை இல்லாமை.
மேற்படி விடயம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் தொழில் சங்க ஒருங்கிணைந்த குழு 2018 ஜனவரி 22ம் திகதி கூடி நீண்ட நேரம் கலந்துரையாடியதன் பின் ஏகமனதாக கீழ் காணப்படும் தீர்மானங்களுக்கு வந்திருந்தனர் அதாவது.
1. 2018 ஜனவரி மாதம் 25ம் திகதி அடையாள வேலை நிறுத்தம் ஒன்றினை ஆரம்பித்தல்.
2. அத்துடன் பயனுறுதியான தீர்வு ஒன்று இல்லையெனின் பெப்ரவரி மாதம் இருந்து அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்குள் கடுமையான தொழில் சங்க செயற்பாடுகளை செயற்படுத்தல்.
அதற்கு அமைய, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு உட்பட சகல பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் சேவையாளர்கள் ஜனவரி 25ம் திகதி சேவையிலிருந்து விலகி தொழில் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இருந்தபோதும் தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இதுவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் எட்டப்படாததன் காரணமாகவே இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள அடையாள வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.