வாக்கெடுப்பு நிலையமொன்றிலிருந்து 500 மீற்றர் பரப்பினுள் தடை செய்யப்பட்டுள்ள செயல்கள் பற்றி தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
உள்ளுராட்சித் தேர்தல் சட்டத்தின் கீழ் இப்பரப்பு 400 மீற்றராக வரையறுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களிடம் வாக்களிக்குமாறு இரந்து கேட்டல், ஒருவருக்கு வாக்களிக்குமாறு பரிந்து கேட்டல், ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு அல்லது வாக்களிக்க வேண்டாமென கட்டாயப்படுத்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளன.
மேலும் தேர்தலுடன் தொடர்புடைய ஏதேனுமொரு துண்டுப்பிரசுரம், விளம்பர சுவரொட்டி, கொடிகள், பதாதைகள் போன்றவற்றை காட்சிப்படுத்தல், அறிவித்தல், பத்திரங்கள் சித்திரம் வேட்பாளரொருவரின் புகைப்படம் அல்லது கட்சியின் சின்னம் சுயேச்சைக்குழுவின் சின்னம் என்பன காட்சிப்படுத்தமுடியாது.
இதை விட அப்பகுதியினுள் ஊர்வலம் நடாத்தவோ, கோசமிடவோ முடியாது. பகிரங்க கூட்டங்களை நடாத்தவோ கிளை அலுவலகத்தை பிரசார நடவடிக்கைக்கு பயன்படுத்தவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்று (07) நள்ளிரவுடன் அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும், தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.