Top News

ஹக்கீமின் முயற்சியால் குருநாகல் மாவட்டத்தில் 700 மில்லியன் ரூபா செலவில வீதி அபிவிருத்தி


பிறவ்ஸ்

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால்
குருநாகல் மாவட்டத்தில் 700 மில்லியன் ரூபா செலவில வீதி அபிவிருத்தி

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்டத்தின் பாதை அபிவிருத்தி, வாகனத்தரிப்பிடம் மற்றும் சமூக நலன்புரி சேவைகளுக்கான பணிமனைக் கட்டடத்தொகுதி என்பவற்றுக்காகக் கடந்த இரு வருட காலத்தில் சுமார் 700 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வீதி அபிவிருத்தித் திட்டங்களில் நான்கு பாதைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

சியம்பலாகஸ்கொடுவ, கெகுனுகொள்ள வீதி, கொபேகனையிலிருந்து வெல்பத்துவௌ வரையான பாதை மற்றும் ரோஸித வீடமைப்புத் திட்டத்துக்கான உள்ளகப் பாதை, கெலிம்பொல பாதை முதலான வீதிகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.சீ.எம்.நபீல் தெரிவித்தார்.

மேலும், மாவத்தகம பகுதியில் வாகனத் தரிப்புப்பூங்காவொன்றை அமைப்பதற்காக சுமார் 46 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுபொத்த என்னும் பகுதியில் 84 மில்லியன் ரூபா செலவில் சமூக நலன்புரி சேவைக்கான பணிமனையொன்று அமைக்கப்பட்டு வருவதுடன், அதுங்கஹகொடுவ பிரதேசத்தில் சுமார் 26 மில்லியன் ரூபா செலவில் வடிகாலமைப்புத் திட்மொன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷh விடுத்த வேண்டுகோளையடுத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவற்றுக்கான நிதிஒதுக்கீடுகளை தனது அமைச்சினூடாக வழங்கியுள்ளார்.
Previous Post Next Post