Top News

சிரியாவில் 8 நாட்களில், 541 பேர் படுகொலை!



சிரியாவில் இடம்பெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டாவில் சில வாரங்களாக தொடர்ச்சியாக சிரிய அரச படைகள் மற்றும் அதன் கூட்டுப் படைகளால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வான் வழி மற்றும் ஷெல் தாக்குதல்கள் இடம்பெறுகின்ற நிலையில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஐ. நா உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

விமான தாக்குதல்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வௌியாகும் நிலையில், ஐ.நா இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

கடந்த 8 நாட்களில், சிரிய அரசின் விமான தாக்குதலால் 541 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 4 இலட்சம் பேர் சிக்கியுள்ள ஓரிடத்தில், பீரங்கி குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Previous Post Next Post