புறக்கோட்டை ஆடையகம் ஒன்றில் தீடீர் தீ!

NEWS


இன்று அதிகாலை கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றில் தீடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 12.45 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக 119 அவசர தகவல் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

இந்நிலையில், குறித்த தீப்பரவல் தற்போதைய நிலையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீயினால் எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படாத நிலையில் , இதனால் ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் தொடர்பில் இதுவரை கணிப்பிடப்படவில்லை.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , சம்பவம் தொடர்பில் கோட்டை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
6/grid1/Political
To Top