பாறுக் ஷிஹான்
தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எமது கூட்டணி ஒருபோதும் குறுக்கே நிற்காது என 13 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து வேட்பாளராக போட்டியிடும் சமூக சேவகர் சமூக சேவகர் கே.எம் நிலாம் தெரி வித்தார்.
சமூக ஊடகங்களில் தன்னை விமர்சித்து கருத்துக்கள் வெளிவருவதை மறுத்து இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கூறியதாவது
சிலர் இருக்கின்றார்கள் எனது கட்சிக்கெதிராகவும் தலைமைக் கெதிராவும் கட்டுக் கதைகளையும் விஷம பேச்சுகளையும் சொல்லித் திரிகின்றனர்.
தற்போது ஒற்றுமையாக உள்ள தமிழ் முஸ்லீம் மக்களின் அபிலாஷைகளுக்கு முட்டுக்கட்டை இடும் வகையில் பகிரங்கமாக சமூக ஊடகங்களில் அச்சுறுத்துகின்றனர்ஆனால் ஒன்றை மட்டும் இங்கு கூற விரும்புகின்றேன்.நான் யாரையும் குறை கூறுபவன் அல்லன்.மற்றவர்களின் அபிலாஷைகளுக்கு குறுக்கே நிற்க மாட்டேன்.எனவே இவ்வாறான விமர்சனங்களை மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ள தேவையில்லை.எனது ஆதரவு அதிகரிப்பதை பொறுக்கமுடியாத ஒரு சிலர் இவ்வாறான கேவலமான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
மிகவும் தெளிவாக கூறுகின்றேன். தமிழ் மக்களுடன் எதிர்த்து பேசி அவர்களுடைய அபிலாஷைகளுக்கு குறுக்கே நின்று என்ற தேவை எங்களுக்கு ஏன் இருக்கின்றது.
எங்களுக்கு ஒரு தனித்துவமான கொள்கை இருக்கிறது. அந்த கொள்கை வேறொரு சமூகத்தின் அபிலாஷைகளில் மண்ணை அள்ளிப் போடுகின்ற கொள்கையாக அதை பார்க்க வேண்டிய அவசியமில்லை என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.