ஹக்கீமை தலைமை பதவியிலிருந்து நீக்கினால் ஆட்சியமைக்க உடன்படுவேன் - அன்சில்
February 11, 2018
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியிலிருந்து நீக்கினால் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சியமைக்க நான் உடன்படுவேன், இல்லேயேல் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரவேண்டிவரும் என அன்சில் குறிப்பிட்டுள்ளார்,
சற்று முன்னர் சிலோன் முஸ்லிமிற்கு பிரத்தியேக செவ்வி வழங்கிய அன்சில் குறிப்பிட்டதாவது,
எனது போராட்டம் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரானது அல்ல, அது ஹக்கீமின் தலைமைத்தவத்திற்கு எதிரானது இதற்காக துவங்கிய போராட்டத்தில் ஒரு போதும் சறுகிவிட மாட்டேன், எனது உள்ளம் சுத்தமானது அந்த சுத்தத்திற்கே தகுந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹக்கீமின் அடாவடித்தனங்களை பொறுத்து பார்த்திருந்தால் எனக்கு இலகுவாக தவிசாளர் பதவி கிடைத்திருக்கும் ஆனால் அவருக்கெதிராக நாங்கள் வெளியேறி போராடி மீண்டும் இறைவன் உண்மைக்கு கூலி வழங்கியிருக்கிறான்.
தலைமைப்பதவியிலிருந்து ஹக்கீமை விலக்குங்கள், இந்த கனமே வருகிறேன், எனது கட்சி முஸ்லிம் காங்கிரஸ் அந்த கட்சிக்காகவே பாடுபடுவேன் அதனை துாய பாதைக்கு இட்டுச்செல்ல பேராடுவேன் என்றார்
Share to other apps